Home உலகம் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரானிய ரொக்கெட்: பற்றி எரியும் முக்கிய கட்டமைப்பு

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரானிய ரொக்கெட்: பற்றி எரியும் முக்கிய கட்டமைப்பு

0

இஸ்ரேலின் ஹைஃபா வளைகுடாவில் உள்ள பசான் குழுமத்துக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் பசான் குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “தாக்குதலில் எங்கள் உற்பத்தி நிலையங்கள் பலமாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக மின் உற்பத்தி நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், எங்களுடைய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உட்பகுதிக் குழும நிறுவனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது.

மின் விநியோகம்

மேலும், “மின் விநியோகத்தை மீளச் செயல்படுத்த இஸ்ரேல் மின்சாரக் கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” எனவும் தெரிவித்துள்ளது.

பசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஹைஃபா வளைகுடா பகுதியில் மிகவும் அடர்த்தியாக மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த நிலையத்தின் முக்கிய அடையாளமான கூலிங் டவர், நீண்ட நாட்களாகவே ஈரானைச் சேர்ந்த ஹிஸ்பொல்லா போன்ற எதிரிகளின் தாக்குதலுக்குப் பக்கமாக இருந்தது. ஆனால் இது வரை நேரடி தாக்குதலை மேற்கொள்ளப்படவில்லை.

மக்கள் எதிர்ப்பு

இந்த நிறுவனம் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துவதால் மற்றும் தாக்குதல் ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும் என்ற பயத்தால், மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நீண்ட காலமாக இதை மூடக் கோரி போராடி வருகின்றனர்.

 

இதையடுத்து 2022ம் ஆண்டு இஸ்ரேல் அரசு, இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 2030ஆம் ஆண்டுக்குள் வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டது.

அதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நிறுவனத்துக்கு அருகிலுள்ள பெரிய எண்ணெய் களஞ்சியக் கொள்கலன்கள் அகற்றும் பணி இந்த ஆண்டு தொடங்கவிருந்தது.

NO COMMENTS

Exit mobile version