Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தல் : கருத்துக் கணிப்பில் முந்திய சஜித்

அதிபர் தேர்தல் : கருத்துக் கணிப்பில் முந்திய சஜித்

0

வெளிநாட்டு கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று அதிபர் தேர்தல் தொடர்பில் மக்களிடையே நடத்திய அண்மைய கணக்கெடுப்பின்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) முன்னிலையில் உள்ளார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

கணக்கெடுப்பின்படி சஜித் பிரேமதாசவுக்கு 45% கிடைத்துள்ளது, அனுர குமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) 20% மட்டுமே கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு மாதத்திற்கு முந்திய கணக்கெடுப்பில்

ஒரு மாதத்திற்கு முன்னர் இதே கணக்கெடுப்பு நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சஜித் பிரேமதாசவை விட அனுர குமார திஸாநாயக்க மிகவும் பிரபலமானவர் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

Source: https://ibctamil.com/article/latest-survey-sajith-premadasa-come-forward-1714607445

NO COMMENTS

Exit mobile version