Home இலங்கை அரசியல் யாராக இருந்தாலும் இனி ஒரு பொருட்டல்ல.! அரசாங்கத்தின் அறிவிப்பு

யாராக இருந்தாலும் இனி ஒரு பொருட்டல்ல.! அரசாங்கத்தின் அறிவிப்பு

0

சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22) கைது செய்யப்பட்டதன் பின்னணியில் அவரது இந்த கருத்து வந்துள்ளது.

தனது ஜனாதிபதி காலத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு தனியார் சுற்றுப்பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரணில் கைது செய்யப்பட்டார்.

அரசாங்கத்தின் உறுதிப்பாடு 

இந்த நிலையில், முன்னாள் ஐஜிபி, முன்னாள் டிஐஜி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, அது இனி ஒரு பொருட்டல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தவறுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரையும் சட்டத்தின் முன் கொண்டுவர அரசாங்கம் தயங்காது என்று அமைச்சர் விஜேபால வலியுறுத்தியுள்ளார். 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் – கொடியிறக்கம்

NO COMMENTS

Exit mobile version