Home இலங்கை சமூகம் பல்கலை மாணவனின் திடீர் மரணம்: முழு ஆதரவுடன் களமிறங்கிய சட்டத்தரணிகள்

பல்கலை மாணவனின் திடீர் மரணம்: முழு ஆதரவுடன் களமிறங்கிய சட்டத்தரணிகள்

0

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு இன்று (03) கருத்து வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள், உயிரிழந்த மாணவனுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொடிய பகிடி வதை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சரித் தில்ஷான் என்ற மாணவன், கடந்த 29 ஆம் திகதி விபரீத முடிவொன்றை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு உயிரிழந்திருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கொடிய பகிடி வதையை தாங்க முடியாமலேயே அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றஞ்சாட்டியுள்னர்.

முழுமையான விசாரணை

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உயர் கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

அத்துடன், சரித்துடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் 16 மாணவர்களிடம் சமனலவெவ காவல்துறையில் நேற்று வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

இதன்படி, மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக சட்டத்தரணிகளான ராச்சிகா பலிஹவடன மற்றும் கல்ஹார விஜேசிங்க முன்னிலையாகியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version