Home இலங்கை சமூகம் பூரண கதவடைப்பு: திருகோணமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

பூரண கதவடைப்பு: திருகோணமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட் கிழமை
பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து திருகோணமலை நகரிலும்
துண்டுப் பிரசுர விநியோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றையதினம்(16.08.2025) இடம்பெற்றுள்ளது.

இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை இளைஞர் அணி ஏற்பாடு செய்து துண்டுப்
பிரசுரத்தை விநியோகித்துள்ளனர்.

பூரண கதவடைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக நிலவும் இராணுவ
பிரசன்னத்திற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து
பூரண கதவடைப்பு அனுஷ்டிக்கப்படவுள்ளதாக குறித்த துண்டுப் பிரசுரத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

NO COMMENTS

Exit mobile version