தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இயக்கப்படும் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
தொடங்கொட சந்திக்கும் வெலிபென்ன சந்திக்கும் இடையிலான 48வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மகும்புரவிலிருந்து காலிக்கு இயக்கப்படும் பயணிகள் பேருந்திலேயே இவ்வாறு பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பு
எவ்வாறாயினும், தீ விபத்தினால் பேருந்தில் பயணித்த பயணிகள் யாரும் காயமடையவில்லை காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.
