Home உலகம் இஸ்ரேலியர் என்பதால் ஹாலிவுட்டின் பிரபல நடிகையின் படத்திற்கு தடை விதித்த நாடு

இஸ்ரேலியர் என்பதால் ஹாலிவுட்டின் பிரபல நடிகையின் படத்திற்கு தடை விதித்த நாடு

0

இஸ்ரேலிய நடிகையான கேல் கடோட்டின் (Gal Gadot) திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிட லெபனான் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக கேல் கடோட் திரையுலகிற்கு வருவதற்கு முன் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றினார்.

காசா மற்றும் லெபனானில் போர்களைத் தூண்டிய சமயத்தில் இருந்தே இவர், இஸ்ரேலின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

கேல் கடோட்டின் திரைப்படம்

இந்த நிலையில், கேல் கடோட் நடிப்பில் ஸ்னோ வையிட் (Snow White) என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

எனினும், லெபனான் நாட்டில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெய்ரூட்டை தளமாகக் கொண்ட விநியோகஸ்தர் தெரிவிக்கையில், “கேல் கடோட் நீண்ட காலமாக லெபனானின் இஸ்ரேல் புறக்கணிப்பு பட்டியலில் இருக்கிறார்.
அவர் நடித்த எந்த திரைப்படமும் இதுவரை லெபனானில் வெளியிடவில்லை.”என அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version