Home உலகம் தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானின் சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கை

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானின் சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கை

0

ஹிஸ்புல்லா (Hezbollah) படைகள் ஆதிக்கம் செலுத்தும் லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் (Israel) இராணுவம் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனானின் சுகாதார அமைச்சர் நேற்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் அனைத்து அவசரமற்ற அறுவை சிகிச்சைகளையும் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்களால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், மருத்துவமனைகள் நிரம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ எச்சரிக்கை

முன்னதாகவே லெபனானின் தெற்கில் குடியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மறைந்திருக்கும் பகுதிகளில் தாக்குதலை முன்னெடுப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

லெபனானின் தலைநகர் பெய்ரூட் (Beirut) மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு குறுஞ்செய்திகளும் பதிவு செய்யப்பட்ட செய்திகளும் வெளியிடப்பட்டு, உடனடியாக தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேரும் படி இஸ்ரேல் ராணுவம் கோரியுள்ளது.

லெபனானின் தகவல் தொடர்பு அமைச்சரும், அதுபோன்ற குறுந்தகவல் தமது அலைபேசிக்கும் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது உங்கள் பாதுகாப்பு கருதி வெளியிடப்படும் தகவல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்க்கது.

NO COMMENTS

Exit mobile version