Home இலங்கை சமூகம் சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! பிள்ளையான் தரப்பு எச்சரிக்கை

சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! பிள்ளையான் தரப்பு எச்சரிக்கை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பொய்களை சித்தரிக்கும் இரா.சாணக்கியனுக்கு (Shanakiyan Rasamanickam) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan – Pillayan) தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை பின்னனியில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஐவர்
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஐந்து வருட தடுப்புக்கு
காவலுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டு

குறித்த சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி அவர்களை நிரபராதிகள் என  நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.

இவ்வழக்கில் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானவர்களில் எமது
கட்சியின் தலைவரும் சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஒருவராவார்.

இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் அமரர் ஜோசப்
பரராஜசிங்கத்தின் கொலைக்கு காரணமானவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் அடிக்கடி சித்தரித்து வசைபாடி வருவதனை நாம் வன்மையாகக்
கண்டிக்கின்றோம்.

அத்தோடு அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை வைத்து சாணக்கியன் போன்றவர்கள் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version