உள்நாட்டு வருமான வரித்திணைக்களம், வரி தொடர்பான குற்றங்களுக்கு எதிரான
நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் மற்றும் அமுலாக்கத்தை வலுப்படுத்தவுள்ளது.
இதன்படி, அதன் வரி குற்ற புலனாய்வுப் பிரிவை திணைக்கள கட்டிடத்தின் 10வது
மாடிக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
2025 ஜனவரி முதலாம் திகதி நிறுவப்பட்ட இந்தப் பிரிவு, ஆகஸ்ட் 21 அன்று
இடமாற்றப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக
இந்தப் பிரிவின் முதன்மையான நோக்கங்களில் வரி ஏய்ப்பு, வரி நிர்வாகத்தைத்
தடுப்பது, குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உதவுவது மற்றும் பிற சட்டவிரோத
நடைமுறைகள் ஆகியவற்றை தடுப்பதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக
வழக்குத் தொடரவும் இந்த பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்தப் பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களம், கையூட்டல் எதிர்ப்பு
ஆணைக்குழு ,இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் துறை இலங்கை சுங்கம்
மற்றும் கலால் துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று திணைக்களம்
தெரிவித்துள்ளது.
