அண்மைய நாட்களாக இரவு வேளைகளில் மலைப்புலிகளின் நடமாட்டத்தால் ஹட்டன்- டிக்கோயா
போடைஸ் தோட்ட பிரதேசவாசிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் மலைப்புலிகள்,
இரவில் இரை தேடி வீடுகளுக்கு அருகில் வருவதாகவும், வீடுகளில் உள்ள செல்லப்பிராணி நாய்களை இரைக்காக பிடித்துச் செல்வதாகவும்
தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, இரவில் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாகவும், மலைப்புலி ஏற்கனவே தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பல
நாய்களை இரையாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மலைப்புலிகளின் அட்டகாசம்
அத்துடன் தோட்டத் தொழிலாளர்கள் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த நாய்களை
மலைப்புலிகள் வேட்டையாடித் தின்று தேயிலைத் தோட்டத்தில் பல இடங்களில் உடலின்
பல பாகங்களை விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் வீடுகளுக்கு அருகில்
சுற்றித் திரியும் மலைப்புலிகளை அருகிலுள்ள காடுகளுக்கு விரட்ட அல்லது வேறு
பொருத்தமான சூழலுக்கு அழைத்துச் சென்று விடுவதற்கு வனவிலங்கு அதிகாரிகளை
நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரிய அச்சுறுத்தல்
எனினும் நேற்று (03) அதிகாலையில் ஹட்டன் போடைஸ் தோட்டத்தில் உள்ள
வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பாதுகாப்பு கமராவில் மலைப்புலி
வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை எடுத்துச் செல்வது காட்சியும் பதிவாகியுள்ளது.
இதனால் தோட்டத் தொழிலாளர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கின்றனர்.
