Home இலங்கை சமூகம் நாயொன்றை வேட்டையாட வந்து பொறியில் சிக்கிய சிறுத்தை

நாயொன்றை வேட்டையாட வந்து பொறியில் சிக்கிய சிறுத்தை

0

நாயொன்றை வேட்டையாடுவதற்கு வந்த சிறுத்தைக் குட்டியொன்று பொறியில்
சிக்கியதாக நுவரெலியா நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்றி தோட்டத்தில் காட்டு விலங்குகளை
வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே சிறுத்தைக் குட்டி இவ்வாறு
சிக்கியுள்ளது.

இது தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நல்லத்தண்ணி
வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட சிறுத்தை

பின்னர், நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து,
பொறியில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்டு விடுவித்துள்ளனர்.

எனினும், குறித்த பொறியை வைத்த நபரை கைது செய்து ஹட்டன் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version