Home இலங்கை சமூகம் மக்களே அவதானம் – எலிக்காய்ச்சலால் பறிபோன குடும்பஸ்தரின் உயிர்

மக்களே அவதானம் – எலிக்காய்ச்சலால் பறிபோன குடும்பஸ்தரின் உயிர்

0

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சலே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கண்ணகி நகரைச் சேர்ந்த கண்டாவளை பிரதேச செயலகத்
தில் அலுவலக உதவியாளராகப் பணி யாற்றும் ப.கிருபாகரன் (வயது 43) என்
பவரே உயிரிழந்துள்ளார்.

குருதி பரிசோதனை 

கடந்த 5ஆம் திகதி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட அவர் தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவரது குருதி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எலிக்காய்ச்சல் இருந்தமை கண்டறிப்பட்டுள்ளது.

அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டு இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version