அமெரிக்கா நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட எமது
பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான,
இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத்
தயாராக உள்ளோம் என காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள் பொங்கல் நாளில் கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு
கூறியுள்ளனர்.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால்
மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டத்தின் பின் தொடரந்தும் கருத்து தெரிவித்த
சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்,
இயற்கைக்கு நன்றி
“இன்று தைப் பொங்கல். இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாள். விவசாயத்திற்கு
இன்றியமையாத சூரிய ஒளியை வழங்கிய சூரியனுக்கு (சூரியக் கடவுள்) நமது நன்றியைத்
தெரிவிக்கும் விதமாக இந்த நாள் தை பொங்கல் 2025.
நாங்கள் நம்பிக்கையை
கொண்டாடுகிறோம். புதிய அமெரிக்க ஜனாதிபாியை வாழ்த்துகிறோம். நீதி மற்றும் இறையாண்மைக்கான தமிழர்
போராட்டங்களை பெருக்குகிறோம்.
தமிழ்
தாய்மார்கள் தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெறும் வரை
இடைவிடாத போராட்டத்தின் 2886 ஆம் நாள் இன்று.
வவுனியா நீதிமன்றத்திற்கு
முன்பாக ஏ-9 வீதியில் நிற்கும் இந்த தைரியமான தாய்மார்கள் சத்தியம் மற்றும்
நீதிக்கான கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைக்கின்றனர்.
தங்களின்
அன்புக்குரியவர்களை வெளிக்கொணர்வதும், எதிர்கால இனப் படுகொலைகளைத் தடுப்பதும்,
தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச
ஆதரவைப் பெறுவதும் தாய்மாரின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.