Courtesy: Dharu
லயன்ஸ் கழகத்திதின் நாட்டை தூய்மையாக்குவோம் (cleanup srilanka) எனும் தொனிப்பொருளிலான கடற்கரையை சுத்தமாக்கும் சிரமதானப்பணி இன்று வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கடற்கரையில் வட பிராந்திய தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தலமையில் இடம்பெற்றது.
இன்று காலை 7:30 மணிமுதல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
சிரமதானப் பணி
யாழ்ப்பாணத்தின் ஏழு லயன்ஸ் கழகங்கள் இணைந்து முன்னெடுத்த குறித்த சிரமதானப்பணியில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான குழுவும் கழந்துக்கொண்டது.
மேலும் இதில், சுமார் முப்பதிற்க்கு மேற்பட்ட பொலிஸாரும், தும்பளை கிழக்கு சமுர்த்தி குழுக்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்ததுடன் பருத்தித்துறை நகரசபை கழிவுகளை ஏற்றிச்செல்வதற்க்கான வாகனத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
இந்நிலையில், மன்னார் ரோட்டரி கழக அங்கத் தவர்களினால் சீரோ பொலித்தீன் என்னும்
கருப்பொருளுக்கு அமைவாக மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி
ஜே.ஆர்.எஸ்.நிலையத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் காணப்படும் பொலித்தீன்
பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி போத்தல்கள் என்பன அகற்றி சுத்தம்
செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் திருமலைராசா தனேஸ்
தலைமையில் இன்று (28) காலையில் 7.00 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த சிரமதான நிகழ்வில் மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களுடன் பாடசாலை
மாணவர்களை கொண்ட ரோட்டிரக்ட் மற்றும் இன் டிரக்ட் அங்கத்தவர்களும் மன்னார்
நகர சபையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி – ஆஸிக்