Home இலங்கை சமூகம் வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

0

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை வலியுறுத்தியும், அவர்களையும்
மனிதர்களாக எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்து நடைபவனி ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய
மகா வித்தியாலயத்தை இந்த நடைபவனி சென்றடைந்து அங்கு நிறைவு பெற்றிருந்தது.

அதிக அளவில் கலந்து கொண்ட திருநங்கைகள்

சுமார் 50 பேர் வரையில் இந்த நடைபவணியில் கலந்து கொண்டதோடு யாழ் சங்கம்
என்கின்ற இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பணியாற்றுகின்ற அமைப்பு இதனை
ஏற்பாடு செய்திருந்தது.

இவ் ஊர்வலத்தில் திருநங்கைகள் அதிக அளவில் கலந்து கொண்டதோடு தமது உரிமைகளை
அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகளை உடைய மனிதப்
பிறப்புகளை என்ற கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version