எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக தமிழ் அரசியல்வாதியொருவர் அரசாங்கத்திடம் இருந்து இரண்டு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த இரண்டு அனுமதிப்பத்திரங்களையும் தலா இரண்டு கோடி ரூபா வீதம் அவர் திகணைப் பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தல்
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம்
அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக வாக்களித்தே அவர் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa)அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இது தொடர்பில் கடுமையான தொனியில் கண்டனம் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
துபாயில் அமைக்கப்படவுள்ள உலகிலேயே மிக பெரிய விமான நிலையம்
பெண் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய சக பொலிஸ் அதிகாரி கைது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |