Home விளையாட்டு GOAT மெஸ்ஸி – உலகக் கிண்ண வரலாற்றில் படைத்த புதிய சாதனை

GOAT மெஸ்ஸி – உலகக் கிண்ண வரலாற்றில் படைத்த புதிய சாதனை

0

அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி, ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதன்மூலம் ஜெர்மனி அணியின் முன்கள வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையையும் முறியடித்துள்ளார். “மெஸ்ஸி உலகக் கோப்பை வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளார்” என FIFA தலைவர் பாராட்டியுள்ளார்.

 டெக்சஸ் மாநிலத்தின் அர்லிங்டன் நகரில் நடைபெற்ற ‘ஜே’ பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

உலகக் கிண்ண வரலாற்றின் சாதனை

ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தனது நான்காவது கோலை அடித்ததன் மூலம், அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி, பிரேசில் அணியின் புகழ்பெற்ற வீராங்கனை மார்டாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில், 23-வது நிமிடத்தில் அடித்த கோல், அர்ஜென்டினாவுக்கு வெற்றியை உறுதி செய்தது. ரசிகர்கள் “GOAT” (Greatest Of All Time) எனக் கத்தி கூச்சலிட்டு கொண்டாடினர்.  

மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடர்களில் மார்டா அடித்த 17 இலக்குகளே ஒட்டுமொத்த உலகக் கிண்ண வரலாற்றின் சாதனையாக நிலைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/lionel-messi-breaks-record-most-world-cup-goals-1782184665

NO COMMENTS

Exit mobile version