Home இலங்கை பொருளாதாரம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு : வெளியான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு : வெளியான அறிவிப்பு

0

புதிய இணைப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு 

லிட்ரோ (litro gas) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (2.7.2024) நள்ளிரவு
வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை திருத்தம்

இந்தநிலையில், புதிய விலைகள் இன்று (2.7.2024) அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (muditha peiris) தெரிவித்துள்ளார்.

மேலும், மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/litro-gas-price-list-reduce-tomorrow-1719854058

NO COMMENTS

Exit mobile version