Home இலங்கை சமூகம் லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

0

ஜனவரி மாதம் உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விலை திருத்தம்

தற்போது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3,690 ஆகவும், 5 கிலோகிராம் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.1,482 ஆகவும் உள்ளது.

மேலும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும்.

இதேவேளை, இந்த மாதம் லாஃப் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என லாஃப் எரிவாயு நிறுவனமும் நேற்று அறிவித்தது.

அதன்போது, எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதன்படி, விலையை உயர்த்த வேண்டிய தேவை இல்லை என்றும் லாஃப் நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version