Home இலங்கை சமூகம் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

தமது நிறுவனம் சமர்ப்பித்த 2025 ஆம் ஆண்டுக்கான எரிவாயு விநியோக கேள்வி பத்திரத்தை பரிசீலனை செய்வதில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளதாக தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

எரிவாயு நிறுவனம்

இதனையடுத்து தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி,ஜனாதிபதி செயலகத்தின் கொள்முதல் குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.

இந்த கடிதத்தில், தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனம், இந்த கேள்வி பத்திரத்திற்கான அனைத்து தொழில்நுட்பத் தகுதிகளையும் பூர்த்தி செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

எனினும் தமது நிறுவனத்தின் எரிவாயு போக்குவரத்துக் கப்பல்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் ஒத்துப்போகவில்லை எனக் கூறி, வெளிப்படையாக பரிசீலிக்காமல் கேள்வி பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தின் ஊடாக முறைப்பாடு அளித்துள்ளது.

கோரிக்கை

எனவே அனைத்து தொழில்நுட்ப தகுதிகளையும் பெற்ற சர்வதேச நிறுவனமான தமது நிறுவனத்தின் கேள்வி பத்திரம் திறக்கப்பட்டு அதன் விலைகள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மேன்முறையீடு குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version