Home இலங்கை பொருளாதாரம் முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு வெளியிட்ட கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு வெளியிட்ட கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

0

சிறிலங்கா அரசாங்கம் விவசாய உற்பத்திகளின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் (Sri Lanka Association of Animal Production) தெரிவித்துள்ளது.

எனவே அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வது உள்ளூர் கைத்தொழிலை அழித்துவிடும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர (Ajith Gunasekara) சுட்டிக்காட்டியுள்ளார்.

முட்டை மற்றும் கோழி இறைச்சி வழங்குதல்

எனினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தட்டுப்பாடு இன்றி முட்டை மற்றும் கோழி இறைச்சி வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/livestock-producers-org-opposition-to-egg-imports-1722654892

NO COMMENTS

Exit mobile version