Home இலங்கை சமூகம் யாழில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் வெளியான தகவல்

யாழில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

யாழ். மாவட்டத்தில் இதுவரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட செயலகத்தில் நேற்று (23.04.2025) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 292 வாக்களிப்பு நிலையங்கள் தபால் மூல வாக்களிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள நிலையில் 21,064 பேர் யாழ். மாவட்டத்தில் தபால் மூலமாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 243 வட்டாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. யாழ் மாநகர சபை, மூன்று நகர சபைகள்,13 பிரதேச சபைகளுக்குமாக 17 சபைகளுக்கு இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.

இந்த தேர்தலுக்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றது. மொத்த வாக்களார் எண்ணிக்கையாக 4,98140 பேர் காணப்படுகின்றனர்.

இதேவேளை தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் 24,25 மற்றும் 27,28 ஆம் திகதிகளில் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் நடாத்தப்படவுள்ளது. எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/GNfQoa76e04

NO COMMENTS

Exit mobile version