Home இலங்கை அரசியல் கோட்டாபய ராஜபக்சவின் கைது தொடர்பில் கசிந்த தகவல்

கோட்டாபய ராஜபக்சவின் கைது தொடர்பில் கசிந்த தகவல்

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மிக கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அநுர அரசின் உயர்மட்டத் தரப்பில் இருந்து அறியமுடிகின்றது.

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிள்ளையானிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அந்தப் பிரதான சூத்திரதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றவே 2019 ஆம் ஆண்டில் ஒரு தரப்பால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

எனவே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திதாரி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல் பிரமுகர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

https://www.youtube.com/embed/TGD3I3B-MdE

NO COMMENTS

Exit mobile version