Home இலங்கை அரசியல் எதிர்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்க்காது : அநுர தரப்பு அதிரடி

எதிர்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்க்காது : அநுர தரப்பு அதிரடி

0

அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva)  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தனிநபர்களின் சுயாதீன குழுக்களை தேசிய மக்கள் சக்தி பரிசீலிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை உறுப்பினர்

தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற நிறுவனங்களில் தேசிய மக்கள் கட்சி சபைகளை நிறுவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் சபைகளை அமைப்பது நெறிமுறைக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற கட்சிகளே சபைகளை நிறுவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version