உள்ளூராட்சி சபை வேட்பாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், அக்மீமன பிரதேச சபையின் வருவாய் ஆய்வாளராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியைச் சேர்ந்த ஒருவர் நேற்று(30.05.2025) அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வணிக உரிமம்
முறைப்பாட்டினை அளித்தவருக்கு, உணவக வணிக உரிமம் ஒன்றை வழங்குவதற்காக சந்தேகநபர் 25,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
