Home இலங்கை அரசியல் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் ஆளும்தரப்பில் அதிகரிக்கப் போகும் கட்டுப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் ஆளும்தரப்பில் அதிகரிக்கப் போகும் கட்டுப்பாடுகள்

0

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் ஆளுங்கட்சிக்குள் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி அமைச்சர்களில் சிலரும் வெளியிடும் கருத்துக்கள் காரணமாக அரசாங்கத்துக்கு அபகீர்த்தியும், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும் ஏற்பட்டு வருகின்றது.

கடுமையான கட்டுப்பாடு

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.

ஜே.வி.பி.கட்சியின் முக்கியஸ்தர்கள் மட்டுமே எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படவுள்ளதுடன், பெரும்பாலும் தொலைக்காட்சி விவாதங்களுக்கும் அவ்வாறானவர்களையே அனுப்பி வைக்கவும் ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version