Home இலங்கை சமூகம் வெளிமாவட்ட உற்பத்தி அரிசியை விற்க முடியாது: யாழ். வணிகர் கழகம் தெரிவிப்பு

வெளிமாவட்ட உற்பத்தி அரிசியை விற்க முடியாது: யாழ். வணிகர் கழகம் தெரிவிப்பு

0

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதிய அளவு கையிருப்பில் இருப்பதால், தென்னிலங்கை மாவட்டங்களில் இருந்து
வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது என யாழ்ப்பாண வணிகர் கழக
தலைவர் ப.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட மொத்த – சில்லறை அரிசி
வியாபாரிகளுடன் விலை நிர்ணய கட்டுப்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (26) இடம்பெற்றது.

உற்பத்தி செய்யப்பட்ட அரிசி

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”பொதுவாக அரிசி விலை தொடர்பாக கடந்த 09.12.2024 அன்று இலங்கை அரசாங்கத்தினால்
வர்த்தமானி வெளியிடப்பட்டு உள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து உற்பத்தி
செய்யப்பட்ட அரிசி மீண்டும் வடமாகாணத்திற்கு வருகின்றது.

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதியளவு கையிருப்பில் இருக்கின்றது. விலையில்
மாற்றங்கள் இல்லை. உள்ளூர் மக்கள் பாவிக்கின்ற அரிசியை எந்த விதமான
தட்டுபாடும் இன்றி கொள்வனவு செய்து கொள்ளமுடியும்.

வெளிமாவட்டங்களில் இருந்து
வரும் வெள்ளைப் பச்சை, சம்பா இன அரிசிகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

சில்லறை வியாபாரிகள் விற்கமுடியாத சூழ்நிலை

அரசாங்கம் ஒரு விலையினை நிர்ணயம் செய்துள்ளனர். அதில் மொத்த, சில்லறை
வியாபாரிகள் விற்கமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.

மொத்த வியாபார விலையாக ஒரு கிலோ வெள்ளைப் பச்சை, அல்லது சம்பா இன அரிசிகள்
215 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

சில்லறை விலையாக 220 ரூபா
நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதாக இருந்தால் கிலோவுக்கு 05
ரூபா செலவாகின்றது. 

அதனை விட கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் ஏற்றி – இறக்க
01ரூபா செலவாகின்றது. போக்குவரத்து செலவீனமாக மொத்தமாக 06 ரூபா செலவாகின்றது.
மொத்த – சில்லறை வியாபாரிகள் இலாபமாக 04 ரூபாவினை எதிர்பார்க்கின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version