Home இலங்கை அரசியல் பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் சத்தமின்றி ஒதுங்கிய லொஹான் ரத்வத்தை

பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் சத்தமின்றி ஒதுங்கிய லொஹான் ரத்வத்தை

0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அடாவடித்தன அரசியலுக்கு பெயர் போன லொஹான் ரத்வத்தை, இம்முறை சத்தமின்றி அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன மட்டுமன்றி ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டிருந்த போதும், அதுகுறித்து அவர்கள் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்திருந்தனர்.

ஆனால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அவ்வாறின்றி கடைசி நேரம் வரை சத்தமின்றி இருந்து விட்டு, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

 

 

தூக்குத்தண்டனை கூடத்தை பார்வையிட்டு சர்ச்சை

இவர் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் வைத்து தமிழ் அரசியல் கைதியொருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மண்டியிடச்செய்திருந்தார்.

அதேபோன்று வெலிக்கடை சிறைச்சாலையின் தூக்குத்தண்டனை கூடத்தை குடிபோதையில் தனது பெண் நண்பியுடன் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து பார்வையிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் இவர் அரசியலைவிட்டும் ஒதுங்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version