Home சினிமா கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் என்ன? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் என்ன? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

0

கூலி 

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த கூலி எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. பலரும் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல் – ரஜினி இணையும் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளிவந்தது.

கண்கவரும் அழகில் நடிகை நடிகை சித்தி இத்னானி.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

இப்படம் உருவாகிறது என்பது உண்மைதான் என ரஜினி மற்றும் கமல் உறுதியாக கூறிவிட்டனர். ஆனால், அப்படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

புதிய கூட்டணி

இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் பவன் கல்யாணை வைத்து புதிய படம் இயக்கப்போவதாக தகவல் உலா வருகிறது. இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

கே.வி.என் நிறுவனம் தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் லோகேஷ் – பவன் காயலான் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

NO COMMENTS

Exit mobile version