Home சினிமா கூலி படத்தால் லோகேஷ் கனகராஜ் இழந்த முக்கிய படம்.. முன்னணி ஹீரோ அழைத்தும் போகாதது ஏன்

கூலி படத்தால் லோகேஷ் கனகராஜ் இழந்த முக்கிய படம்.. முன்னணி ஹீரோ அழைத்தும் போகாதது ஏன்

0

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது அதன் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில் தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்திருக்க வேண்டியது என்கிற தகவலை லோகேஷ் கூறி இருக்கிறார்.

பராசக்தி வில்லன்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க என்னை தான் அணுகினார்கள்.

சிவகார்த்திகேயன் அழைத்தார், கதையும் பிடித்து இருந்தது.

ஆனால் அதில் நடித்தால் கூலி படம் பாதிக்கப்படும் என்பதால் நடிக்கவில்லை என லோகேஷ் கூறி இருக்கிறார்.

அந்த ரோலில் தற்போது ரவி மோகன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source: https://cineulagam.com/article/lokesh-kanagaraj-missed-villain-role-in-parasakthi-1754423262

NO COMMENTS

Exit mobile version