Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் காதல் விவகாரத்தால் இளைஞனுக்கு நேர்ந்துள்ள அவலம்

தமிழர் பகுதியில் காதல் விவகாரத்தால் இளைஞனுக்கு நேர்ந்துள்ள அவலம்

0

கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறை பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இளைஞன் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது, நேற்று(23) இடம்பெற்றுள்ளது.

காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இந்த சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் தனுஜன் எனும் 18
வயதுடைய இளைஞனின் கை துண்டாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படுகாயமடைந்துள்ள இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

Source: https://ibctamil.com/article/love-affair-young-man-s-hand-amputated-kilinochchi-1719186231

NO COMMENTS

Exit mobile version