Courtesy: Sivaa Mayuri
அனர்த்த நிவாரணத்திற்காக சீனா (China) வழங்கிய சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதிகள், இலங்கை திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 30 வரையான இயற்கைப் பேரிடர்களால் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதியை திறைசேரி, பாதுகாப்பு அமைச்சுக்கு உடனடியாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வரவுசெலவுத் திட்டம்
2024 வரவுசெலவுத் திட்டத்தில் பேரிடர் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய போதுமான நிதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால், இந்த கூடுதல் ஏற்பாடுகள் அவசியமாக இருந்தன.
மேலும், அவசரகால மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசில் இருந்து 10 மில்லியன் யுவான் மதிப்புள்ள பொருள் உதவி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்பொருட்கள் கிடைத்தவுடன் முறையாக விநியோகிக்கப்படும் என்று திறைசேரி அறிவித்துள்ளது.