Home இலங்கை குற்றம் காதலியை கொன்றதாக நினைத்து காதலன் செய்த செயல்

காதலியை கொன்றதாக நினைத்து காதலன் செய்த செயல்

0

குருநாகல் – முகுனுவட்டவன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு காதலர்களுக்கு ஏற்பட்ட தகராறு விபரீதமாக மாறியுள்ளது.

காதலி மீது கோபமடைந்த 30 வயது காதலன் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

எனினும் பொலிஸார் மற்றும் அயலவர்கள் இணைந்து இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளனர்.

திருமணம் 

இந்த சம்பவத்தில் மாத்தறை பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞன் ஒருவரும் 32 வயதுடைய பெண்ணும் காயமடைந்தனர்.

தனது தந்தையுடன் தனியாக வசிக்கும் இந்த இளைஞன், சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொள்ளவிருந்த காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் காதலர்கள் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 16 ஆம் திகதி மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முகத்தில் சுடப்பட்ட பின்னர் வீட்டை விட்டு வெளியே ஓடிய இளம் பெண், பிரதான வீதியில் அருகே ஒரு கடைக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.

விபரீத முடிவு

அந்த பகுதி மக்கள் அம்புலன்ஸில் சிலாபம் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், அந்த இளைஞனை விசாரித்தபோது, ​​வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்ததுடன் அறையில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த பகுதி மக்கள் கயிற்றை அறுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 30 வயதுடைய காதலன் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version