Home இலங்கை பொருளாதாரம் வருமானம் குறைந்த முதியோர்களுக்கான உதவித்தொகை: வெளியான முக்கிய தகவல்

வருமானம் குறைந்த முதியோர்களுக்கான உதவித்தொகை: வெளியான முக்கிய தகவல்

0

 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் பெரியவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு 3,000 ரூபா கொடுப்பனவுகள் இன்று (20) முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய முதியோர் செயலகம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.

இன்று முதல்…. 

இதன்படி, இந்த மாதத்திற்கான கொடுப்பனவு மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரை உதவித்தொகையைப் பெற்று வரும் பெரியவர்களுக்கே இந்தக் கட்டணம் வழங்கப்படும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version