லக்கி பாஸ்கர்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
கங்குவா 17 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, குழந்தை நட்சத்திரம் ரித்விக், ராம்கி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
வசூல் மற்றும் லாபம்
வித்தியாசமான திரைக்கதையில் அமைந்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்கை தாண்டி OTT-யிலும் கலக்கிக்கொண்டிருக்கும் லக்கி பாஸ்கர் படம் உலகளவில் ரூ. 115 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 30 கோடி லாபம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.