Home இலங்கை சமூகம் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்: செய்திகளின் தொகுப்பு

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்: செய்திகளின் தொகுப்பு

0

கொழும்பில் (Colombo) உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இதன்போது, உயர்ஸ்தானிகரலாயத்தின் மதில்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்த பதாகைகளை
ஒட்ட முயன்றதை அடுத்தே இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது அலுவலக
செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் (Bangladesh) உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின்
குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 வீத இட ஒதுக்கீடு வழங்க அந்த நாட்டு
அரசாங்கம் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளதை எதிர்த்து மாணவர்களின் போராட்டம்
வெடித்துள்ளது.

இந்த போராட்டம் காரணமாக அந்நாட்டில் இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதுடன்,
இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு…..

NO COMMENTS

Exit mobile version