Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணம் – நல்லூர் எல்லைக்குள் விரைவில் இதற்கு முற்றாக தடை

யாழ்ப்பாணம் – நல்லூர் எல்லைக்குள் விரைவில் இதற்கு முற்றாக தடை

0

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் உணவுப் பொதி செய்ய பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

அந்தவகையில், நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்சிட் (Lunch Sheet) பாவனை 2026 ஆரம்பத்திலிருந்து முற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரேரணை நேற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வில், உப தவிசாளர் இ. ஜெயகரன் முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில், இந்தத் தீர்மானம் உறுப்பினர்களின் ஏகமன ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version