சினேகன்
தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் நடிகர், நடிகைகளை தாண்டி மற்ற கலைஞர்கள் அதிகம் கவனம் பெற்றது இல்லை.
ஆனால் இப்போது நிலைமை வேறு, ஒரு படத்திற்காக பாடுபடும் அனைத்து கலைஞர்களுமே கவனம் பெறுகிறார்கள். அப்படி தமிழில் நிறைய ஹிட் பாடல்கள் எழுதி ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பாடும் பாடல்களை கொடுத்த பாடலாசிரியர் தான் சினேகன்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வரை இந்த பாடல்கள் எல்லாம் அவர் தான் எழுதினாரா என்பது பலருக்கும் தெரியாது. பாடலாசிரியர், நடிகர், அரசியல் பிரபலம் என பன்முகம் காட்டி வருகிறார்.
திருமணம்
சினேகன் பிக்பாஸ் முடித்த பிறகு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமண வயதை தாண்டி தான் சினேகனுக்கு திருமணம் நடந்தது, இப்போது 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தாமதமாக திருமணம் செய்தது குறித்து சினேகன் பேசுகையில், கல்யாணம் பண்ணாம காத்திருந்ததுக்கு பின்னால் எவ்ளோ வலி இருக்கும் என எனக்கு தான் தெரியும்.
3 அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து 4 அண்ணனுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டியதா இருந்தது. நான் என்னோட ஆசையை எல்லாம் புறம் தள்ளி அவ்வளவு வலியோட காத்திருந்தேனே தவிர எனக்கு பொண்ணு கிடைக்காமல் கல்யாணம் செய்யாமல் இருக்கல என கூறியுள்ளார்.
