Home இலங்கை சமூகம் குரங்கு பறித்த குரும்பை கழுத்தில் வீழ்ந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: கேகாலையில் துயரம்

குரங்கு பறித்த குரும்பை கழுத்தில் வீழ்ந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: கேகாலையில் துயரம்

0

குரங்கு பறித்த குரும்பை ஒன்று நபரொருவரின் கழுத்தில் விழுந்ததில் அவர், உயிரிழந்த சம்பவம், கேகாலை (Kegalle)-புலத் கொஹுபிட்டிய, பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில், ஒரு பிள்ளையின் தந்தையான ஏ.ஜி.ஜயசேன என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த நபர் வீட்டுக்கு அருகே இருக்கும் தென்னை மரங்களில் இருந்து வீழ்ந்து கிடந்த
தேங்காய்களை கடந்த 27ஆம் திகதி சேகரிக்க சென்றுள்ளார்.

உயிரிழப்பு

இதன்போது, தென்னை
மரத்தில் இருந்து குரும்பையைக் குரங்கு பிடிங்கிய போது அந்தக்
குரும்பை, மேற்படி நபரின் கழுத்துப் பகுதியில் வீழ்ந்துள்ளது.

இந்தநிலையில் , அவர்,  அவசரமாக கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம்  உயிரிழந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version