இலங்கையில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை விநியோகித்த இந்திய மான் பார்மசோட்டிக்கள் நிறுவனம் (Maan Pharmaceutical Ltd) இலங்கை சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி விளக்கமளித்துள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்
உடனடியாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வு கூடத்தில் தங்கள் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட மருந்துகளை பரிசோதனை செய்யுமாறும், அதற்கான அனைத்து செலவுகளை தனது நிறுவனம் பொறுப்பேற்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பரிசோதனைக்கு அனுப்பப்படும் தடுப்பூசியின் மாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைத்திருக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.அது தொடர்பில் இலங்கை சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது,
இந்த கடிதம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு அறிவித்துள்ளோம்.
இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தெரியப்படுத்தப்படும்.அது அவ்வாறிருக்க தடைசெய்யப்பட்ட ondansetron தடுப்பூசி மற்றும் பத்து மருந்துகள் சம்பந்தமாக பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
