Home இலங்கை அரசியல் மாவீரர்களை வைத்து சொத்துக்களை குவிக்கும் சில புலம்பெயர் தமிழர்கள்..

மாவீரர்களை வைத்து சொத்துக்களை குவிக்கும் சில புலம்பெயர் தமிழர்கள்..

0

மாவீரர்களை வைத்து சொத்துக்களை குவிக்கும் புலம்பெயர்ந்து வாழும் ஒரு சிலர்

அடுத்தவரவுள்ள திருச்சட்டத்தில் தமிழருக்கான பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டிய நிலை உள்ளது,

இதில் புலம்பெயர் தேசத்திலுள்ள புத்திஜீவிகள் பெரும் பங்காற்றுகிறார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின்” கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

தமிழர்களின் பிரச்சினை குறித்து சிந்திக்கூடிய பலர் புலம்பெயர் தேசத்தில் உள்ளார்கள். ஆனால் இந்த நாட்டிற்குள் தொடர்ந்தும் பிரச்சினை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தரப்பினர் உள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக இலங்கைக்குள் ஏதாவதொரு பிரச்சனை இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள்.

யுத்தத்தில் தங்களது அவயங்களை இழந்தவர்களுக்கு உதவ யாருமில்லை, அவர்களே உழைத்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் அவர்களை வைத்து இலாபம் தேடுகின்றார்கள், நவம்பர் மாதம் வந்தாலே அவர்கள் தங்களது வசூலை ஆரம்பித்துவிடுவார்கள் என குறிப்பிட்டார்.

இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..

NO COMMENTS

Exit mobile version