Courtesy: kapilan
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் மாவீரர்
நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின்
ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மங்கள
வாத்தியங்களோடு அழைத்துவரப்பட்டு அதன் பின்னர் ஈகைச் சுடரினை நான்கு
மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்தார்.
நான்கு மாவீரர்களின் தாய்
இதனை அடுத்து நினைவுக் கல்லறைக்கு நான்கு மாவீரர்களின் மற்றுமொரு தாய் மலர்
மாலை சூடி அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் அங்கிருந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெற்றோர்
மற்றும் உரித்துடையோரால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டதோடு கலந்து கொண்டவர்களால்
அஞ்சலி தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் இடம்பெற்று இருந்தது.
