Home இலங்கை சமூகம் முதல் மாவீரர் சங்கருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல்

முதல் மாவீரர் சங்கருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல்

0

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும்
சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி
செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை உறுப்பினர் க.சதீஸ்
உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம்
செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம்
அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version