கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையில், மாவீரர்களின் நினைவினை போற்றும்
நிகழ்வு அமைதியான சூழலில் இடம்பெற்றது.
சபையின் உதவிசாளர் தயாபரன் தலைமையில் இன்று காலை நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் மரியாதைகளை செலுத்தினர்.
நிகழ்வுக்குப் பின்
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த உபதவிசாளர், வரவிருக்கும் மாவீரர் தினத்தை
முன்னிட்டு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தார்.
நினைவஞ்சலி
இந்த மாதம் 27ஆம் திகதி மதிய
வேளையின் பின்னர் நெல்லியடி வர்த்தகர்கள் தங்களது கடைகள் மற்றும் வர்த்தக
நிலையங்களை மூடி, நினைவேந்தலில் பங்கேற்கும் சூழலை உருவாக்குமாறு அன்புடன்
வேண்டுகிறேன்.
இது எங்கள் சமூகத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் தருணம் என்று அவர்
கூறினார்.
பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
