மாவீரர் நினைவேந்தலை எவ்வித தடையுமின்றி நினைவு கூரலாம் என அநுர அரசாங்கம் தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கவிடயம். ஆனால் அதனை அவர்கள் சொல்லில் மட்டும் காட்டாமல் எவ்வித இடையூறுமின்றி செயலிலும் காட்டவேண்டுமென்று கூறுகிறார்கள் கிளிநொச்சியில் வாழும் தமிழ் மக்கள்
ஐபிசி தமிழ் மக்கள் கருத்து நிகழ்விற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
மாவீரர்கள் எங்களின் தெய்வங்கள் . அவர்கள் எமது சகோதரர்கள்,எமது பிள்ளைகள் அப்படித்தான் அவர்கள் இருந்தனர். எனவே இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு பூரண அனுமதியை தந்தால் அது எமக்கு மகிழ்ச்சியான விடயமே என தெரிவித்தார் ஒருவர்.
அவர்கள் தங்களுக்காக போய் மடியவில்லை. எனவே அவர்களுக்கு அஞ்சலியை செலுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்றார் மற்றொருவர்.
மாவீரர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான நினைவேந்தல் குறித்தும் மக்கள் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/Lwv3g2o9HZ8
