Home சினிமா சிவகார்த்திகேயனின் மதராஸி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க

சிவகார்த்திகேயனின் மதராஸி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க

0

மதராஸி

2025ம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று மதராஸி. அதுவும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவானதால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வால் வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் ஷபீர், பிஜு மேனன், விக்ராந்த், தலைவாசல் விஜய் என பலரும் நடித்திருந்தனர்.

வசூல் 

கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆன மதராஸி படம் இதுவரை 12 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. சரி, இந்த 12 நாட்களில் உலகளவில் மதராஸி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

இதுவரை உலகளவில் ரூ. 91 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை தொடுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/madharaasi-movie-12-days-box-office-collection-1758077458

NO COMMENTS

Exit mobile version