Home சினிமா அஜித் மேல் பிரபல நடிகைக்கு Crush.. ஆனால் தங்கை என அழைத்த AK.. யார் அந்த...

அஜித் மேல் பிரபல நடிகைக்கு Crush.. ஆனால் தங்கை என அழைத்த AK.. யார் அந்த நடிகை தெரியுமா

0

அஜித் 

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 ஹீரோக்களில் அவரும் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அஜித்தின் கெரியர் பெஸ்ட் படமாக GBU மாறியுள்ளது.

அஜித்தின் மேல் ரசிகைகளுக்கு மட்டுமின்றி பல நடிகைகளுக்கு Crush ஏற்பட்டுள்ளது. அதை பலரும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். அப்படி அஜித் மேல் தனக்கு Crush இருந்ததாக பிரபல நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.

அஜித் மேல் Crush

நடிகை ஸ்ரீதேவியின் தங்கையான இவர் அஜித்துடன் இணைந்து நேசம் மற்றும் உல்லாசம் என இரு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை மகேஸ்வரி, அஜித் மேல் எனக்கு Crush இருந்தது. அவருடன் இரண்டு திரைப்படங்கள் பணியாற்றி இருக்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித்தை பார்க்க முடியாமல் வருத்தத்துடன் நடிகை மகேஸ்வரி இருந்த நிலையில், அஜித்தே அவரிடம் வந்த பேசியுள்ளார். அப்போது நீ எனக்கு தங்கை போல் என அஜித் கூறியுள்ளார். இந்த தகவலை நடிகை மகேஸ்வரி அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version