Home சினிமா இரண்டு நாட்களில் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இரண்டு நாட்களில் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

மதராஸி

அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அனிருத் இசையமைக்க வித்யுத் ஜாம்வால், பிஜு மேனன், ஷபீர் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூல் 

கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்தாலும் கூட வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மதராஸி படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டு நாட்களில் மதராஸி படம் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/madharaasi-movie-2-days-box-office-collection-1757213042

NO COMMENTS

Exit mobile version