Home சினிமா இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்

0

மதராஸி 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தில் வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் உடன் இப்படத்தில்தான் இரண்டாவது முறையாக வித்யுத் கைகோர்த்துள்ளார்.

நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க விக்ராந்த், பிஜு மேனன், சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! புகைப்படம் இதோ

அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருகின்றனர். மேலும் இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகிறது.

பிசினஸ்

சிவகார்த்திகேயன் படம் என்றாலே கண்டிப்பாக வியாபாரம் அமோகமாக நடக்கும். ஒவ்வொரு ஏரியாவையும் போட்டிபோட்டு வாங்க விநியோகஸ்தர்கள் முன் வருவார்கள். பல கோடிகளுக்கு பிசினஸ் நடக்கும். அதுவும் அமரன் படத்தின் வெற்றிக்கு பின், சிவாவின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றுவிட்டது.

இந்த நிலையில், மதராஸி திரைப்படத்தின் தமிழக உரிமை ரூ. 40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் ரெகார்ட் பிரேக்கிங் சாதனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version